பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்


பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று 21 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர வண்டி, மனவளர்ச்சி குன்றிய 6 பேருக்கு மாதம் தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 250 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர்(காலால்) ராஜவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story