மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்
கொள்ளிடம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், மாவட்ட வேளாண் இயக்குனர் சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான 167 மனுக்கள் பெறப்பட்டு அதில் 117 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி விவசாயிகளுக்கு மானிய விலையில் விசைத்தெளிப்பான், உரங்கள், களையெடுக்கும் கருவி உள்ளிட்டவைகளை வழங்கி பேசினார்.
மருத்துவ முகாம்
முகாமில் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும் ஊட்டச்சத்து துறை சார்பில் இயற்கை உணவு காட்சிப்படுத்தும் வகையில் காய்கறிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய கருவிகள், தோட்டக்கலை துறை சார்பில் அனைத்து வகையான காய்கறி விதைகள் உள்ளிட்டவைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார், வேளாண்மை உதவி இயக்குனர்கள் பொன்னி, எழில் ராஜா, ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினா ராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தி ராஜேந்திரன், கனகராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.