27 பயனாளிகளுக்கு ரூ.15.28 லட்சத்தில் நலத்திட்ட உதவி


27 பயனாளிகளுக்கு ரூ.15.28 லட்சத்தில் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 3:49 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 27 பயனாளிகளுக்கு ரூ.15.28 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 27 பயனாளிகளுக்கு ரூ.15.28 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். அதன்படி கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 351 மனுக்கள் பெறப்பட்டன.

நலத்திட்ட உதவி

இந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story