மக்கள் நேர்காணல் முகாமில் 164 பேருக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் நேர்காணல் முகாமில் 164 பேருக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

மக்கள் நேர்காணல் முகாமில் 164 பேருக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 164 பேருக்கு ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

மக்கள் நேர்காணல் முகாம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமில் 164 பேருக்கு ரூ.23 லட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்கள் சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் தான் அந்த திட்டங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம்.

அரசு அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதுபோன்ற மக்கள் நேர்காணல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முகாமில் சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 71 பேருக்கு முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில் ஒருவருக்கு இயற்கை பேரிடர் நிவாரணம், இலவச வீட்டுமனைப்பட்டா, 15 பேருக்கு இணையவழி பட்டா மாற்றம் மற்றும் நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணை, தோட்டக்கலைத்துறை சார்பில் 7 பேருக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் வேதாரண்யம் ஆத்மா குழுத்தலைவர் சதாசிவம், வேதாரண்யம் நகரசபை தலைவர் புகழேந்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம்முருகையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், உதவி கலெக்டர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன், மாவட்ட கவுன்சிலர் சோழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குருதி கொடையாளர்கள் தின விழா

வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் ஊராட்சி மன்றம், அரசு ஆஸ்பத்திரி சார்பில் உலக குருதி கொடையாளர்கள் தின விழா நடந்தது. இதற்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், அரசு கலைக்கல்லூரி முதல்வர் குமரேசமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் நிலவழகி வரவேற்றார். நிகழ்ச்சியில் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு நாகை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மருத்துவத்துறை இணை இயக்குனர் நெடுமாறன், துணை இயக்குனர் ஜோஸ்பின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story