திருக்கோவிலூரில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகர தி.மு.க.சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகரமன்ற தலைவருமான டி.என்.முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சுமார் 1000 பேருக்கு வேட்டி, சேலை, சலவை பெட்டி, வேளாண் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் விழுப்புரம் மத்திய மாவட்டசெயலாளா் நா.புகழேந்தி எம்.எல்.ஏ., நகர அவைத்தலைவர் டி.குணா, நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி குணா, அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.அன்பு, மாவட்ட பிரதிநிதி மணி என்கிற சுப்பிரமணி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், இளைஞர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் வி.நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.