கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

திருவண்ணாமலையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரத்து 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

திருவண்ணாமலை

நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், 10 ஆயிரத்து 100 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் ஆகியவை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், எஸ். அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,100 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பத்தாயிரம் வீதம் பொற்கொழி வழங்கி கவுரவித்தார்.

மேலும் ஸ்கூட்டர், மாணவிகளுக்கு மடிக் கணினி, சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டி, கிரிக்கெட் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு கிட் என 10 ஆயிரத்து 100 பேருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க.மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.முத்து, தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநில தொழிலாளர் நலன் பிரதிநிதியுமான இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவானந்தம், அன்பழகன், பாண்டுரங்கன் ஒன்றிய செயலாளர்கள் பெ.கோவிந்தன், மெய்யூர் சந்திரன், த.ரமணன், கோ.ரமேஷ் மு.பன்னீர்செல்வம், ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன், திருவண்ணாமலை நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், தண்டராம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.பி.ஆர்.ரமேஷ், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரை வெங்கட், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், வழக்கறிஞர்கள் டி.எம்.கதிரவன், வெற்றி டிஜிட்டல் கார்த்திகேயன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரிகிருஷ்ணன்,

செங்கம்-ஆரணி

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் என்.நரேஷ்குமார், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எ.மணிகண்டன்,

செங்கம் நகர செயலாளர் அன்பழகன், புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன், செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா, புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வ பாரதி மனோஜ்குமார், கலசபாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன்,ஒன்றிய செயலாளர்கள் கலசப்பாக்கம் வழக்கறிஞர் சுப்பிரமணியன், சிவகுமார், துரிஞ்சாபுரம் ராமஜெயம், புதுப்பாளையம் ஆறுமுகம்,

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர், துணைத் தலைவர் கே.டி.ராஜேந்திரன், திறன் மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் எம்.சுந்தர், துரை மாமது, எஸ்.மோகன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்தனன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி, முள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா வெங்கடேசன், எஸ்.வி.நகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பிரதிநிதி எம். எஸ். ரவி, காமக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசங்கர், சேத்துப்பட்டு நகர செயலாளர் முருகன்,

கீழ்பென்னாத்தூர்

ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், அண்ணாமலை, மாரிமுத்து, பேரூர் செயலாளர்கள் அன்பு, முருகையன்,

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத் தலைவர் வாசுகி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகாமி தேவேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன், கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் அன்பு, கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன்,

தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், துணைத் தலைவர் பேபி ராணி, ஒன்றிய குழு தலைவர்கள் மாமண்டூர் டி.ராஜி, திலகவதி ராஜ்குமார், நாவல் பாக்கம் வி.பாபு, ஒன்றிய செயலாளர் என்.சங்கர், கே.சீனிவாசன், ஞானவேல் ரவிக்குமார், தினகரன், திராவிட முருகன், நகர செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ. என்.சம்பத்,

தெள்ளார்-வந்தவாசி

தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், டிஆர்.ராதா, வந்தவாசி ஒன்றிய செயலாளர்கள் சிஆர்.பெருமாள், கேஆர்பி. பழனி, வந்தவாசி நகரச் செயலாளர் தயாளன், வந்தவாசி நகரமன்ற தலைவர் எச்.ஜலால், துணை தலைவர் அன்னை சீனுவாசன், மாவட்ட இளைஞர் அணி எம்.கிஷோர்குமார், மாவட்ட பொறியாளர் அணி கே.யுவராஜ், மதன்குமார், டாக்டர் கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story