10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்குகிறார்


10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்குகிறார்
x

திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 10,100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்து உள்ள கலைஞர் திடலில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்குகிறார்.

துணை சபாநாயகரும், கட்சி தணிக்கைக்குழு உறுப்பினருமான கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்கிறார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 10 ஆயிரத்து 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் தி.மு.க.தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

கலந்துரையாடல் கூட்டம்

முன்னதாக மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை-வேலூர் சாலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திலும் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதனையொட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவண்ணாமலை பைபாஸ் சாலையிலிருந்து நகருக்கு செல்லும் சாைல முழுவதும் தி.மு.க.கொடிகள் கட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்திலும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதனையொட்டி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


Next Story