1,338 பேருக்கு ரூ.27¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


1,338 பேருக்கு ரூ.27¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

1,338 பேருக்கு ரூ.27¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார், கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு 739 பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களையும், 599 பேருக்கு ரூ.15.64 லட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் 1,338 பேருக்கு ரூ.27.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவரும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவருமான பொன்குமார் நிருபர்களிடம் கூறும்போது,

கடந்த 1½ ஆண்டுகளில் புதிதாக 7½ லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை 5 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.480 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு என்று அழைக்கக்கூடாது என கூறும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறோம். கவர்னரின் செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார். இதில் தொழிலாளர் இணை ஆணையர் சசிகலா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தொழிலாளர் உதவி ஆணையர் லெனின் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story