14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
தஞ்சையில் நடந்த முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 14 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினர்.
தஞ்சையில் நடந்த முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 14 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு மற்றும், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
14 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 14 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் என 95 நபர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட முப்படைவீரர் வாரிய துணைத்தலைவர் மேஜர் பாலகிருஷ்ணன் (ஓய்வு), மாவட்ட அலுவலர்கள் மற்றும் தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மேஜர்.சரவணன் (ஓய்வு) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.