ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் கடந்த மே 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நேற்று அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் கி.ராஜேந்திரன், அ.சுபாஷ்சந்தர், தி.மு.க. நகர செயலாளர் தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் 31 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 48 பேருக்கு பட்டா மாற்றம், 33 பேருக்கு குடும்ப அட்டை, 50 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, 5 பேருக்கு வேளாண் கருவிகள் உள்பட 322 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story