341 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நல்லூரில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 341 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்
வலங்கைமான்
நல்லூரில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 341 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாம்
வலங்கைமானை அடுத்த நல்லூரில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. இந்த முகாம் அன்னுக்குடி, உத்தமதானபுரம், நல்லூர், மூலழ்வாஞ்சேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடந்தது. முகாமிற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
உதவி கலெக்டர் சங்கீதா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், தி.மு.க. ஒன்றியகுழு உறுப்பினர் அன்பரசன் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவிகள்
முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 60 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, வருவாய் துறையின் சார்பில் 246 பேருக்கு இலவச வீட்டுமனைபட்டாவிற்கான ஆணை, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பேருக்கு மரக்கன்றுகளும், வேளாண்மை துறையின் சார்பில் 6 பேருக்கு பேட்டரி தெளிப்பான், தார்ப்பாய், வேளாண் கருவி, நெல் விதைகள், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையின் சார்பில் 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகளிர் திட்டத்தின் கீழ் 4 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலை என மொத்தம் 341 பயனாளிகளுக்கு ரூ.84 லட்சத்து 463 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சவுந்தரியா சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் லதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி, மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலச்சந்தர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அமுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் புவனா
வலங்கைமான் தாசில்தார் அன்பழகன், வருவாய் சரக ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்த்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.