ஜமாபந்தியில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ஜமாபந்தியில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

சிவகிரியில் நடந்த ஜமாபந்தியில் 35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 24-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 273 மனுக்கள் பெறப்பட்டன. 9 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகையும், ஒருவருக்கு விபத்து மரண உதவித்தொகையாக 1 லட்சம் வழங்குவதற்கான ஆணையும், முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிட ஆணையும், குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் 10 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டன. மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் செய்யது அலி பாத்திமா மில்லத், முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், சிவகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலைமணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன் (கூடலூர்), வள்ளியம்மாள் (வாசுதேவநல்லூர்), சரவணக்குமார் (சிவகிரி) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story