86 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
மனுநீதி நாள் முகாமில் 86 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள கூடலூரில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் பல்வேறு துறையின் கீழ் 86 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை, வேளாண்மை துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் கலெக்டர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, சிவகிரி வருவாய் வட்டாட்சியர் ஆனந்த், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.