பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

பாபநாசத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தஞ்சாவூர்
பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா தலைமையில் ஜமாபந்தி நிறைவு நாள் நடைபெற்றது. அப்போது சாலியமங்கலம் மற்றும் அம்மாப்பேட்டை சரகத்தை சேர்ந்த 30 கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய தணிக்கை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து 155 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார். மேலும், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். முகாமில் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுஜாதா, நில அளவையர் பிரசாத் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் செல்வராணி, சாந்தி மற்றும் துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








Next Story