பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

வலங்கைமானில் பயனாளிகளுக்கு ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்.

திருவாரூர்

வலங்கைமான் அருகே கருப்பூர் கிராமத்தில் கீழ விடையல், மேல விடையல், கண்டியூர் ஆகிய 3 கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, உதவி கலெக்டர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அந்த மனுக்களில் 187 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்ட 96 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசாணை, வேளாண்மை துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி சிதம்பரம் வழங்கினார். முகாமில், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா, கவிதா, ராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story