கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி


கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி நகர் எமனேஸ்வரத்தில் கைத்தறி துறையின் மூலம் 9-வது தேசிய கைத்தறி தின விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் ரகுநாத் அனைவரையும் வரவேற்றார்.

இதில் 16 பேருக்கு முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்திற்கான கடன் உதவிகளையும், மத்திய அரசின் சமர்த் நெசவு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 5 பேருக்கு ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்து 808 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ஜீவரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் அருளாந்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் சேசய்யன், செயலாளர் ருக்மாங்கதன், கைத்தறி ஆய்வாளர் ரத்தின பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், பாக்யராஜ். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். கைத்தறி கண்காணிப்பு அலுவலர் லெட்சுமி வெங்கட சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story