மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x

நெமிலியில் நடந்த முகாமில் 260 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

நெமிலியில் நடந்த முகாமில் 260 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் உரிய பரிசோதனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனர்.

முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு 157 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை, 103 நபர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு நிதி உதவியும் வழங்கினார்.

500 பேர் விண்ணப்பம்

மேலும் பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், தையல் எந்திரம், ஊன்றுகோல், பேட்டரியால் இயங்கும் சிறப்பு நாற்காலி, காது கேட்கும் கருவி, ஆவின் பாலகம், இலவச வீட்டு மனை, வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு, தொழில் தொடங்க வங்கி கடன் உதவி மற்றும் அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, தீனதயாளன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாசில்தார் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன், நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story