நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 20 Aug 2023 7:30 PM GMT (Updated: 20 Aug 2023 7:30 PM GMT)

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை

வாடிப்பட்டி

மதுரை மாவட்ட மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சமயநல்லூர் அருகே டெபேதார் சந்தையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் தமிழாளன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளாக வேட்டி, சேலை, நோட்டு புத்தகம் வழங்கினார். அதேபோல் பூதகுடியில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சமயநல்லூர், பட்டக்குறிச்சி, வைரவநத்தம், வடுகபட்டி, பெருமாள்பட்டி, கோவில்பாப்பாகுடி, விட்டன்குளம், சிறுவாலை, செல்லக்கவுண்டன்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி கிளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக திருமாவளவன் பிறந்தநாள் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் ஊர்சேரி சிந்தனை வளவன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி னார். இதில் நிர்வாகிகள் மதிபாலன், ஹரி விஜய் அழகேசன், தமிழ்வளவன், பாண்டி, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story