நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ெரட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை, குருநாதநாயக்கனூர், ஜி.நடுப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள தி.மு.க. சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி பிறந்தநாளைெயாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுள்ளெறும்பில் நடந்தது. இதற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருநெல்லிக்கோட்டை ஊராட்சி தலைவர் சின்னு என்ற முருகன் வரவேற்றார்.
விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ஆத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி செயல்படுத்தி வருகிறார். அதில் ஆடலூருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 2 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நினைவில் நாங்கள் என்றும் இருக்கிறோம். உங்கள் தேவைகளை கூறுங்கள் செய்து தருகிறோம் என்றார். விழாவில் குருநாதநாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜெயா என்ற பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஒன்றிய அவை தலைவர் வெள்ளையன், முருநெல்லிகோட்டை செந்தில்குமார், ஜி.நடுப்பட்டி ராமர், கொத்தப்புள்ளி ஊராட்சி துணைத் தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 500 பேருக்கு அன்னதானமும், மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.