ரூ.2½ கோடியில் நலத்திட்டங்கள்
கருப்பன் வலசு ஊராட்சியில் ரூ.2.65- கோடி மதிப்பில் பயிர்கள் கடன் மற்றும் புதிய கட்டிடங்களை நலத்திட்டங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
மூலனூர்
மூலனூர் ஊராட்சி ஒன்றியம் கருப்பன் வலசு ஊராட்சியில் ரூ.2.65- கோடி மதிப்பில் பயிர்கள் கடன் மற்றும் புதிய கட்டிடங்களை நலத்திட்டங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
நலத்திட்ட உதவிகள்
தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பன் வலசு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கிளை தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில்154 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடன் உதவிகளை தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள். முன்னதாக ரூ.23 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு அறிவிக்கும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு முழுமையாகவும், உடனடியாகவும் சென்றடைய வேண்டும் என்பதில் முழு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக மகளிருக்கு தேர்தல் வாக்குறுதியில் கூறிய மற்றும் கூறாத பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசும்போது " கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு தொழிலை திறம்பட செய்து தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடன் உதவி செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.