மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் ஆ.வேலாயுதம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ப.விஜயலட்சுமி வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் 11 பாழடைந்த கட்டிடங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இடிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு துணைத்தலைவர் ஆ.வேலாயுதம், ஏன் மற்ற உறுப்பினர்களிடமும் பாழடைந்த கட்டிடங்களின் விவரங்களை கேட்டு அப்பணியும் இத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றார். அதற்கு தலைவர் நீங்கள் தகவல் தெரிவித்தால் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றி தருகிறோம் என்றார்.

அடுத்த கூட்டத்தில் இந்த திட்டம் இருக்குமா?, ஏன், முன்கூட்டியே அனைவரிடமும் கேட்கவில்லை என்றார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் தேவிகாபுரம் கணேஷ் எழுந்து கூட்டம் முடிக்கப்பட்டது என்றார்.

அப்போது துணைத்தலைவர் உன்னிடம் நான் பேசவில்லை அதிகாரியிடம் கேட்கிறேன் என்றார். அதற்கு அதிகாரி இந்த கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி தாருங்கள் என உறுப்பினர்களிடம் கூறினார்.

அதற்கு 3 உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் கைகளை உயர்த்தி தீர்மானத்தை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.

அப்போது துணைத்தலைவர் இதேபோல அனைத்து தீர்மானங்களுக்கும் ஒவ்வொரு முறையும் கையை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்றார். இதனால் உறுப்பினர்கள் இடையே காரசாரமாக விவாதம் ஏற்பட்டது.

பின்னர் அனைத்து உறுப்பினர்களும் தங்களது பகுதிகளுக்கு தேவையான குறைகள் குறித்து பேசினார்கள்.


Next Story