சென்னை விமான நிலையத்தில் மேற்கு வங்காள மாநில பெண் மயங்கி விழுந்து சாவு


சென்னை விமான நிலையத்தில் மேற்கு வங்காள மாநில பெண் மயங்கி விழுந்து சாவு
x

சென்னை விமான நிலையத்தில் மேற்கு வங்காள மாநில பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பெண் நிர்மலா பசாரி (வயது 68) தனது மகன் விஜய் பசாரியுடன் வந்தார். உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடக்கும் பகுதிக்கு நடந்து வந்தபோது நிா்மலா பசாரி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரது மகன் விஜய் பசாரி, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தாா். விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து நிர்மலா பசாரியை பரிசோதித்தபோது அவர் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார், நிர்மலா பசாரி உடலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் நிர்மலா பசாரி மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்து தனியாா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை முடிந்து சொந்த ஊர் செல்ல விமான நிலையம் வந்தபோது இறந்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது


Next Story