ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மேற்கு வங்க வாலிபர் கைது


ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மேற்கு வங்க வாலிபர் கைது
x

மானாமதுரை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மேற்கு வங்க வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க கடந்த செவ்வாய்கிழமை மர்ம நபர் ஒருவர் முயற்சி செய்தார். அப்போது அங்கு போலீசார் வந்ததால் அங்கிருந்து அவர் தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர் மேற்கு வங்க மாநிலம் சோன்காலி பகுதியைச் சேர்ந்த டெபப்ராதா பூன்யா என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தப்பியோடிய அவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story