மேற்கு புறவழிச்சாலை பணிகள் தொடக்கம்
கோவையில் பாலக்காடு, மேட்டுப்பாளையம் சாலையை இணைக் கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி யது. முதற்கட்டமாக 11 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.
கோவையில் பாலக்காடு, மேட்டுப்பாளையம் சாலையை இணைக் கும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி யது. முதற்கட்டமாக 11 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்கப்படுகிறது.
மேற்கு புறவழிச்சாலை
கேரளா, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாகனங்கள் ஊட்டி மற்றும் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கோவை மாநகர பகுதிக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மாநகர பகுதிக் குள் வராமல் மேட்டுப்பாளையம் சாலையை சென்றடையும் வகை யில் கோவை-பாலக்காடு, கோவை-மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ரூ.1,630 கோடி
அதன்படி இந்த சாலை கோவை- பாலக்காடு சாலையில் மைல்கல் என்ற பகுதியில் தொடங்கி சிறுவாணி சாலையில் உள்ள மாதம் பட்டி, வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே முடிவடைகிறது.
இது மொத்தம் ரூ.1,630 கோடியில் 32.4 கி.மீ. தூரத்தில் 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு மொத்தம் 370 ஏக்கர் நிலம் தேவை. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு முதற்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பணிகள் தொடங்கியது
கோவையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் 3 கட்ட மாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி பாலக்காடு சாலை மைல்கல் பகுதியில் இருந்து சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், சிறுவாணி சாலை மாதம்பட்டி வரை 11.2 கி.மீ. தூரத்துக்கு முதற்கட்டமாக சாலை அமைக்கப்படுகிறது.
எனவே அந்த பகுதியில் இருக்கும் முட்புதர்களை அகற்றி, மேடு பள்ளமான பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.
4 வழிச்சாலை
இதற்கிடையே மற்ற 2 பகுதிகளிலும் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும். அதன்பிறகு அங்கு பணிகள் தொடங்கப் படும். இதனால் சாலை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்படாது.
இந்த சாலை 45 மீட்டர் அகலத்துக்கு 4 வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. முக்கிய பகுதிகளுக்கு செல்ல சர்வீஸ் சாலையும் அமைக்கப்படுகிறது. 2 ஆண்டுக்குள் சாலை அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் குறையும்
இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும்போது கேரளாவில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி செல்லும் வாகனங்கள் மாநகர பகுதிக்கு வர வாய்ப்பு இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. அதுபோன்று கிழக்கு புறவழிச்சாலையும் அமைக்கப்பட்டு விட்டால் மாநகர பகுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறைந்து விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.