சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேவைக்காக திமிங்கல சுறாக்கள் கடற்கரை வருகை
சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேவைக்காக திமிங்கல சுறாக்கள் உணவு தேடி மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிக்கு வந்ததை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில் அந்த பகுதி மீனவர்கள் சிலர் படகில் சென்று வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 20 அடி நீளம் கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் திமிங்கல சுறாக்கள் உணவு தேடி மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிக்கு வந்ததை கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதனை மீனவர்கள் செல்போனில் புகைபடம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இது குறித்து மீனவர் மனோஜ்குமார் கூறும்போது, "சாதாரணமாக 500 கடல் மைல் தொலையில் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு சென்றால்தான் திமிங்கல சுறாக்களை பார்க்க முடியும். இவை சங்கரா, கொரளி, கானாங்கெளுத்தி, காரைபொடி போன்ற மீன்களை உணவாக உட்கொள்ளும். இவை மனிதனையே விழுங்கும் ஆற்றல் கொண்டவை. அதிக அளவிலான சிறிய வகை மீன்களை உண்ணுவதற்காக ஆழ்கடல் பகுதியில் இருந்து கரை பகுதிக்கு வருகிறது. தற்போது ஆழ்கடல் பகுதியில் மீன்கள் இல்லாததால் இரைக்காக கரைப்பகுதிக்கு வந்துள்ளது" என்றார்.