6 தளங்களிலும் அமையும் வசதிகள் என்னென்ன?


6 தளங்களிலும் அமையும் வசதிகள் என்னென்ன?
x

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு கட்டப்படும் புதிய கட்டிடத்தில் 6 தளங்களிலும் அமையும் வசதிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்துக்கு 6 தளங்களுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். அந்த கட்டிடத்தில் அமைய இருக்கும் வசதிகள் வருமாறு:-

தரைத்தளத்தில் அஞ்சலகம், பொது மக்கள் குறைதீர்கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல்பிரிவு அலுவலகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவையும், முதல் தளத்தில் தொழிலக பாதுகாப்புத்துறை, குற்ற வழக்குகள் பதிவு துறை, புள்ளியியல் துறை அலுவலகங்களும், 2-வது தளத்தில் தேசிய தகவலியல் மையம், பஞ்சாயத்து உதவி இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட கருவூலம் மற்றும் 2 துணை கலெக்டர் அலுவலகங்களும் செயல்படும்.

3-ம் தளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் கலால், முத்திரை, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், ஆதிதிராவிடர் நலத்துறை, தணிக்கை மற்றும் சுற்றுலாத்துறை அலுவலகங்கள் ஆகியவையும் செயல்படும். 4-ம் தளத்தில் கலெக்டர் அலுவலகம், கூட்ட அரங்குகள், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, துணை கலெக்டர்கள் மற்றும் பயிற்சி கலெக்டர் அலுவலகம் ஆகியவையும், 5-ம் தளத்தில் அவசர கால உதவி மையம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம், மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறப்பு தாசில்தார் அலுவலகங்கள் ஆகியவையும், 6-ம் தளத்தில் கனிமவள சிறப்பு துணை இயக்குனர், மகளிர்மேம்பாட்டு நல உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகிய அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story