கடலில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன?


கடலில் மூழ்கிய கல்லூரி மாணவரின் கதி என்ன?
x

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் மாயமானார்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

சென்னை கிண்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சூரியகுமார்(வயது 21). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சிஏ. படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி இவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் குளித்துள்ளார். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவரை கடல் அலை இழுத்துச்சென்றது. இதனால் சூரிய குமார் கடலில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படை போலீசார் மற்றும் மீனவர்கள் அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story