ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன?

ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன?
கோயம்புத்தூர்
ஆனைமலை
கோவையை சேர்ந்த கார்த்திகேயன்(வயது 22) என்பவர், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேைல பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று டாப்சிலிப் பகுதிக்கு சுற்றுலா வந்தார்.
இதற்கிடையில் அவர்கள் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென கார்த்திகேயன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அவரது நண்பர்கள், பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், ஆற்றில் இறங்கி கார்த்திகேயனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story






