சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?- அண்ணாமலை கேள்வி


சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?- அண்ணாமலை கேள்வி
x
தினத்தந்தி 30 Aug 2022 2:46 PM IST (Updated: 30 Aug 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் நேரடியாக தலையிட்டு அப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

சென்னை,

சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதாவது ;

எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களது மனசு மாறியிருக்கிறதா? மாறினால் எதற்காக மாறியிருக்கிறது? அப்படி இருந்தால் மத்திய அரசின் ஏராளமான திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள்? தமிழக மக்களுக்கு முதல் அமைச்சர் நேரடியாக விளக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பரந்தூர் விமான நிலையம் குறித்து தெளிவான திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை; இது குறித்து மக்களிடம் கேட்டு அவர்கள் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்"பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அமைச்சர்கள் இருக்கக்கூடிய ஒரு குழுவை அமைத்து, முதல் அமைச்சர் நேரடியாக தலையிட்டு அப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தி.மு.க. ஆட்சியில் பரந்தூர், படலம், திருப்போரூர், பன்னூர் ஆகிய பகுதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2வது விமான நிலையம் தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக வேண்டும். இதனால், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பிரச்சினை இல்லாமல் வேகமாக விரைந்து விமான நிலைய திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும். என கூறினார்.


Next Story