ரஜினியுடன் கவர்னர் அரசியல் பேசியதில் என்ன தவறு ? - அண்ணாமலை


ரஜினியுடன் கவர்னர் அரசியல் பேசியதில் என்ன தவறு ? - அண்ணாமலை
x

சென்னையை அடுத்த நீலாங்கரையில், கடலில் தேசியக் கொடிப் பேரணியை அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை ,

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையை அடுத்த நீலாங்கரையில், கடலில் தேசியக் கொடிப் பேரணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கி வைத்தார்.இதில் சுமார் 250 மீனவ படகுகளுடன் ஆயிரம் மீனவர்களுடன் சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஈசிஆர் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கடற்கரையில் கடலில் பேரணி சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது ;இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். கவர்னர் பொதுமக்கள், பல்துறை சாதனையாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவது கவர்னரின் மரபு.

அவ்வாறாகவே நடிகர் ரஜினிகாந்தும் கவர்னரை சந்தித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் பேசியதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது? என தெரிவித்துள்ளார்.

மனிதனை தவறாக பேசுவதற்கு அரசியல் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்டுங்கள்.கடலில் செல்லும் படகுகளுக்கு 80 சதவீத மானியம் வழங்குவது, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என அனைத்துமே அரசி


Next Story