எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
“எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்” என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஏரல்:
"எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்" என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் ஏரலில் நடந்தது.
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் கருணாநிதியுடன் தோளுக்கு தோளாய் நின்றவர் அன்பழகன். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு உறுதுணையாக இருந்தவர் அன்பழகன். வருகிற 19-ந் தேதி ஒவ்வொரு கிளை கழகத்திலும் பேராசிரியர் அன்பழகன் படம் வைத்து மாலை அணிவித்து நினைவு கூற வேண்டும்.
வெற்றி பெறும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். ஆகவே இனி எந்த தேர்தல் வந்தாலும் அனைத்திலும் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் மேற்கு கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம், ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர். தலைமை கழக பேச்சாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் காவல்காடு சொர்ணகுமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஏரல் பேரூராட்சி செயலாளர் ராயப்பன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் வாழவல்லான் மகாராஜன், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.