சபரிமலையில் இருந்து வந்தபோதுசாலையில் கார் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
உத்தமபாளையம் அருகே சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த சவடப்பள்ளியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது 40). இவரது உறவினர்கள் லோகநாதரெட்டி (42), சுஜித் ரெட்டி (14), ரோஹித்குமார் ரெட்டி (11), கல்யாண்குமார் ரெட்டி (44), பிரகாஷ் (44). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் அனைவரும் காரில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து அனைவரும் காரில் ஆந்திராவிற்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். காரை நவீன்குமாா் ஓட்டினார்.
உத்தமபாளையம்-சின்னமனூர் சாலையில் உத்தமபாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.