ெசல்வபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு எப்போது?


ெசல்வபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு எப்போது?
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை செல்வபுரத்தில் ரூ.46 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு எப்போது என்று பயனாளிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை செல்வபுரத்தில் ரூ.46 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு எப்போது என்று பயனாளிகள் எதிர்பார்த்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

கோவை செல்வபுரம் ஐ.யு.டி.பில் காலனியில் வசித்து வந்த 288 பேரின் குடியிருப்புகள் சேதமடைந்ததைதொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.46 கோடியே 44 லட்சம் செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றது.

இங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.கட்டுமான பணிகள் பெரும்பகுதி முடிந்துவிட்டது. ஏற்கனவே குடியிருந்தவர்கள் பங்களிப்பு தொகையாக ரூ.49 ஆயிரத்து 512-ம், புதிதாக ஒதுக்கீடு பெறுபவர்கள் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

குடியமர்த்த கோரிக்கை

இந்த நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பங்களிப்பு தொகை செலுத்தியவர்கள், குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யுமாறு கோரியுள்ளனர். இதுகுறித்து பயனாளிகள் கூறியதாவது:- பழுதடைந்த 288 வீடுகளில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தோம். கடந்த 2018-ம் ஆண்டு வீடுகள் இடிக்கப்பட்டு அங்கேயே கட்டித்தருவதாக உறுதிளித்தனர்.

இதனை நம்பி காலி செய்தோம். 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீடுகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே குடியிருந்த 200-க்கும் மேலானவர்கள் பங்களிப்பு தொகையும் செலுத்தி விட்டார்கள். தற்போது அடுக்குமாடி கட்டுமான பணிகளும் முடிந்துவிட்டன. ஆகவே எங்களுக்கு விரைவில் குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விரைவில் ஒதுக்கீடு

இதுகுறித்து நிர்வாக பொறியாளர் வெங்கடேசன்கூறும்போது, ஏற்கனவே குடியிருந்தவர்கள் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். பணிகள் பெரும்பகுதி முடிந்துவிட்டது.

மின் இணைப்புக்கான டெபாசிட் தொகை செலுத்தப்பட்டுவிட்டது. லிப்ட் பணிகள் இன்னும் 15 நாளில் முடிந்துவிடும். அனைத்து பணிகள் முடிந்ததும் வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story