``அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது?'': பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
``அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது?'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மாலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். அவர் கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் கோவில் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு நடைபெற உள்ள அரையாண்டு தேர்வு எல்லா ஆண்டும் நடப்பது போல் இந்த ஆண்டும் நடைபெறும்.
தேர்வு விடுமுறை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளிகளை இணைப்பது அதிக அளவு மாணவர் சேர்க்கை வரவேண்டும் என்பதற்குத்தான். தொடக்கப்பள்ளிகளில் 10 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். அதனால் தொடக்கப்பள்ளிகள் மூடப்படாது.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.