போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது?


போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு எப்போது?
x

ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

ஏழாயிரம்பண்ணையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து ெநரிசல்

சாத்தூரில் இருந்து சங்கரன்கோவில், கோவில்பட்டி, செல்லும் மெயின் ரோட்டில் ஏழாயிரம் பண்ணை அமைந்துள்ளது. இப்பகுதியில் காலை, மாலை, நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சாத்தூர் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெயரளவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் பஸ்கள் சென்று திரும்ப முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் சிறிதுகூட குறையவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவேங்கடம், புளியங்குடி, வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் பஸ்நிலையத்திற்குள் செல்லாமல் மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கி விடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிரந்தர தீர்வு

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.

மேலும் மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப வாகனங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகையால் பழைய ஏழாயிரம் பண்ணை, சிவசங்குபட்டி வழியாக சங்கரபாண்டியபுரம் வரை சுற்று வட்ட பாதை அமைத்தால் கனரக வாகனங்கள் வெளியே செல்லும் வகையில் மாற்றி அமைக்க முடியும்.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏழாயிரம்பண்ணையில் சுற்றி வட்ட பாதை அமைக்க அளவீடு செய்யும் பணியை தொடங்க வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story