அரசு பஸ் மோதியதில், கார் குளத்துக்குள் பாய்ந்தது
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ் மோதியதில், கார் குளத்துக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்சரவணன் (வயது 26). இவர் தனது காரில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் மகிழ்வண்ணநாதபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் (ஒன் டூ ஒன்), கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் அருகில் உள்ள நாகல் குளத்தின் பள்ளத்தில் பாய்ந்தது. காரில் இருந்த பொன்சரவணன் 'சீட் பெல்ட்' அணிந்திருந்ததால் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதம் அடைந்தது. இ்ந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story