கைதிகளை அழைத்து சென்றபோதுதகராறு செய்த 8 பேர் மீது வழக்கு


கைதிகளை அழைத்து சென்றபோதுதகராறு செய்த 8 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கைதிகளை அழைத்து சென்றபோது தகராறு செய்த 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து கோனப்பன். சரக்கு வாகன டிரைவர். கடந்த 8-ந்தேதி இரவு இவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது மேலசொக்கநாதபுரம் விலக்கு அருகே நின்று கொண்டிருந்த 8 வாலிபர்கள் போலீசாரை வழி மறித்து நின்று தகராறு செய்து அவர்களை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலசொக்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், கார்த்திக், ஜெயக்குமார், தொட்டப்பன், ஆனந்த், ஆனந்தன், முத்துராஜா, கீழசொக்கநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story