கொடுமுடி அருகே ஆன்மிக சுற்றுலா வந்தபோது வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்


கொடுமுடி அருகே ஆன்மிக சுற்றுலா வந்தபோது வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்
x

கொடுமுடி அருகே ஆன்மிக சுற்றுலா வந்தபோது வேன் கவிழ்ந்து 11 பேர் காயம் அடைந்தனா்.

ஈரோடு

ஊஞ்சலூர்

கொடுமுடி அருகே ஆன்மிக சுற்றுலா வந்தபோது வேன் கவிழ்ந்து 11 பேர் காயம் அடைந்தனர்.

ஆன்மிக சுற்றுலா

தேனி பகுதியை சேர்ந்த சிலர் ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக சுற்றுலா வேனை வாடகைக்கு அமர்ந்திருந்தனர். இவர்கள் தேனியில் இருந்து புறப்பட்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் அவர்கள் நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

11 பேர் காயம்

வேனை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது38) ஓட்டினார். இரவு 7.30 மணி அளவில் கொடுமுடி அருகே உள்ள கருவேலம்பாளையம் என்ற இடத்தில் வேன் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் பிரேக் போட்டார். இதில் வேன் நிலைதடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி 11 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் 8 பேரும், கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.


Related Tags :
Next Story