மூதாட்டி மீது லாரி ஏறியதில் பரிதாப சாவு
மூதாட்டி மீது லாரி ஏறியதில் பரிதாப சாவு
நீடாமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மூதாட்டி மீது லாரி ஏறியதில் பரிதாபமாக அவர் இறந்தார். இதில் அவரது கணவரும் காயமடைந்தார்.
மூதாட்டி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள பழவனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது69). இவரது மனைவி சாந்தகுமாரி (63). நேற்றுமுன்தினம் இருவரும் மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு சென்றிருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் ெரயில்வே கேட் வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியதில் பின்னால் அமர்ந்து இருந்த சாந்தகுமாரி கீழே விழுந்தார்.
லாரி ஏறியதில் பரிதாப சாவு
அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக சாந்தகுமாரி மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இதில் பக்கிரிசாமிக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாந்தகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பக்கிரிசாமி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.