வால்பாறை அண்ணா திடலில் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் அமைப்பது எப்போது?- பொது மக்கள் எதிர்பார்ப்பு


வால்பாறை அண்ணா திடலில்  வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் அமைப்பது எப்போது?- பொது மக்கள் எதிர்பார்ப்பு
x

வால்பாறை அண்ணா திடலில் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் அமைப்பது எப்போது? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அண்ணா திடலில் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடம் அமைப்பது எப்போது? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

திட்டம் தயாரிப்பு

வால்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான அண்ணா திடலில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் வாகனங்கள் நிறுத்துமிடம் கலையரங்கம் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் அரசின் சார்பில் எந்த ஒரு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கும் இடமில்லை. வால்பாறை நகர் பகுதியை பொறுத்தவரை வாழைத் தோட்டம் பகுதியில் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் உள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடமும் வால்பாறை மெயின் ரோட்டில் உள்ள நகராட்சி அண்ணா திடலுக்குரிய இடங்கள் மட்டுமே எந்தவித பயன்பாடும் இல்லாத நிலையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் அண்ணா திடலில் நகராட்சி வணிக வளாகமும், மேல் தளத்தில் பொது மக்கள் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா சமயத்தில் பயன்படுத்துவதற்காக கலையரங்கமும், கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்புகள்

ஆனால் திட்டம் தயாரிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. வால்பாறை நகர் பகுதியில் அன்றாடம் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல், வாடகை வாகனங்கள், தனியார் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை அண்ணா திடலில் வணிக வளாகம் வாகனங்கள் நிறுத்தும் இடம் கலையரங்கம் அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story