ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?


ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
x

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?

திருப்பூர்

அருள்புரம்

திருப்பூர் தெற்கு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான திருப்பூர் பழையபஸ் நிலையம் முதல் அருள்புரம் வரை ஆக்கிரமிப்புகள் உள்ளது. இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சரவணன் கடந்த மாதம் 6-ந் தேதி திருப்பூர் போலீஸ் கமிஷனர் மற்றும் சட்டம்- ஒழுங்கு திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வீரபாண்டி சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பாதுகாப்புக்கு போலீசார் ஈடுபடுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளார். இதுவரைக்கும் எந்த பதிலும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி அரசு துறைகளில் உள்ள அதிகாரிகளிடையே ஒற்றுமை இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

----


Next Story