லிப்ட் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?


லிப்ட் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோயம்புத்தூர்


மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் லிப்ட் அமைக்கும் பணி தொடங்குவது எப்போது? என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மருதமலை கோவில்

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்த நிலையில்கோவிலுக்கு வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மலை மீது ஏறி செல்ல சிரமப்படுகின்றனர்.

இவர்கள் நலன் கருதி இங்கு ரோப் கார் அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டநாள் கோரிக்யைாக இருந்தது.

இது குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அறநிலையத்துறை பொறியாளர்கள் மருதமலையில் நேரடி ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு ரோப் கார் ஆரம்பிக்க சாத்திய கூறு இல்லை என்றும் அதற்கு பதிலாக லிப்ட் அமைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லிப்ட் அமைக்க மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

பணிகள் நடைபெறவில்லை

இதில் ராஜகோபுரத்தின் அருகில் இருந்து மேலே சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக இடம் தேர்வு செய்து லிப்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வல்லுனர்கள்குழு இதற்கான வரைபடத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி லிப்ட் அமைக்க மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூமிபூஜை நடைபெற்றது.

இதில் அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதை அடுத்து லிப்ட் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக லிப்ட் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை.

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு லிப்ட் அமைப்பதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.

ஆனால் இதுவரை எந்த பணிகளும் இங்கு நடக்கவில்லை. நாளுக்கு நாள் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு மிகவும் அவதிப்படுவதால் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக லிப்ட் பணிகளை தொடங்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையில் கோவை வந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும் லிப்ட் அமைக்கும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் இன்னும் பணிகள் தொடங்காமல் உள்ளது. ஆகவே விரைவாக பணிகளை தொடங்க வேண்டும் எங்களது எதிர்பார்ப்பு என்றனர்.


Next Story