வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - ஐகோர்ட்டு கேள்வி


வனத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - ஐகோர்ட்டு கேள்வி
x

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக வழக்கை விசாரித்தனர்.

அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,

''இந்த பணியாளர்களை தேர்வு செய்ய 10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும்'' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ''வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், வனத்தை எப்படி அரசால் பாதுகாக்க முடியும்?

1,161 பணியிடங்களை நிரப்ப சுமார் ரூ.10 கோடி ரூபாய் செலவு ஆகும் என்றால், ஒரு பணியிடத்தை நிரப்ப தோராயமாக 93 ஆயிரம் ரூபாய் செலவு ஆகுமா? எதற்காக இவ்வளவு பெரிய செலவு செய்ய வேண்டும்.

பொதுவாக இதுபோன்ற தேர்வுகளில் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுமே? அந்த தொகை என்னவாகும்? யாருக்கு செல்லும்? இந்த பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் உள்ளதே?.

இந்த கேள்விகளுக்கு விரிவான பதிலை அறிக்கையாக தமிழ்நாடு வனத்துறை நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். அதில், இந்த காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? என்பதையும் கூற வேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.


Next Story