வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு திரும்புவது எப்போது?


வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு திரும்புவது எப்போது?
x

வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு திரும்புவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் சாலையோர கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு:

வியாபாரிகள் மீண்டும் மார்க்கெட்டுக்கு திரும்புவது எப்போது?

பெரம்பலூர், டிச.18-

பெரம்பலூரில் சாலையோர கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் நிலையில், கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் மீண்டும் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

தினசரி காய்கறி மார்க்கெட்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீமாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள வியாபாரிகளுக்கு திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு சில காய்கறிகள் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைவாக இருப்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக காய்கறிகள் வாங்குவதற்கு இந்த மார்க்கெட்டிற்கு வந்து வாங்கி செல்வது வழக்கம்.

கொரோனா கால கட்டத்தில்...

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த மார்க்கெட்டை திறக்க அனுமதிக்கப்படாததால் வியாபாரிகள் சாலையோரங்களிலும், உழவர் சந்தை முன்பும் கடைகள் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.

கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகும் மார்க்கெட்டுக்கு பெரும்பாலான வியாபாரிகள் திரும்பவில்லை. இதனால் மார்க்கெட்டில் குறைந்த அளவே காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு பெரும்பாலான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருவதில்லை.


Next Story