அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? -பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? -பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
x

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

மதுரை


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது யார்? என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதில் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள், பாரம்பரிய வழக்கப்படி அந்தந்த கிராம மக்கள் சார்பில் அமைக்கப்படும் கமிட்டிகள் சார்பில் நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக கிராம மக்களிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

அதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரடியாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அதில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், விவசாய சங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது போட்டியை நடத்துவது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் முடிவு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.

மாவட்ட நிர்வாகம்

இது குறித்து அமைச்சர் மூர்த்தி கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போட்டியை நடத்துவதற்கு அவனியாபுரம் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வந்தால், போட்டியை யார் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வோம். இல்லையென்றால் போட்டியை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது, என்றார்.


Next Story