தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்?


தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்?
x

மாயனூர்-வீரராக்கியம் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர் யார்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

ஆண் பிணம்

கரூரில் இருந்து திருச்சி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மாயனூர்-வீரராக்கியம் இடையே உள்ள பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் ரெயில் மோதி இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story