தீயில் கருகி பிணமாக கிடந்த பெண் யார்?


தீயில் கருகி பிணமாக கிடந்த பெண் யார்?
x
தினத்தந்தி 10 May 2023 1:00 AM IST (Updated: 10 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

காந்திபுரத்தில் தீயில் கருகி பிணமாக கிடந்தெபண் யார் என்பது குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக திருநங்கைகள் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

காந்திபுரத்தில் தீயில் கருகி பிணமாக கிடந்தெபண் யார் என்பது குறித்து மர்மம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக திருநங்கைகள் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருகிய நிலையில் உடல்

கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து திடீரென துர்நாற்றம் வீசியது. இது குறித்த தகவலின் பேரில் ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். தீயில் கருகி உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பிணம் கிடந்தது.

அதன் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. மேலும் அந்த நபர் இறந்து ஒரு வாரம் ஆகி இருக்க லாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்

எனவே அந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த இடம் திருநங்கைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திருநங்கைகள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை நடைபெற்ற பிரேத பரிசோதனையில் கருகி இறந் தது ஒரு பெண் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் திருநங்கையாக இருக்கலாம் என்று கருதப் பட்ட நிலையில், பெண் என்று தெரிய வந்துள்ளதால் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்காணிக்க உத்தரவு

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, பிணமாக கிடந்தவர் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விரைவில் முழு விவரம் தெரியவரும் என்றார்.

பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையின் அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு படுக்கை அமைத்து பாலியல் தொடர்பு உள்ளவர்கள் நடமாடும் பகுதியாகவும் அந்த பகுதி இருந்துள்ளது.

ஆனால் அந்த பகுதியை போலீசார் கண்காணிக்காமல் இருந்துள்ளனர்.

எனவே குற்றம் நடைபெறும் பகுதிகளில் போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story