முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்த பதிவை ராணுவம் நீக்கியது ஏன் ? திமுக எம்.பி.கனிமொழி கேள்வி


முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்த பதிவை ராணுவம் நீக்கியது ஏன் ? திமுக எம்.பி.கனிமொழி கேள்வி
x

மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றதை முதல்-அமைச்சர் வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்டதை நீக்கியது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் முதல்முறையாக ராணுவ மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் முதல் -அமைச்சர் வாழ்த்திய அந்த பதிவை ராணுவம் தற்போது நீக்கியுள்ளது

இந்த நிலையில் மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றதை முதல் -அமைச்சர் வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்டதை நீக்கியது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்


Next Story