வெள்ளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்?-போலீசார் விசாரணையில் தகவல்


வெள்ளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்?-போலீசார் விசாரணையில் தகவல்
x

வெள்ளி வியாபாரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

சேலம்

சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 48). வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கிய அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது தனசேகர், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் பணம் கடன் பெற்றார். அதற்கு அவர் வட்டியும் வழங்கி வந்து உள்ளார். சம்பவத்தன்று கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு அந்த பெண், தனசேகரிடம் கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. தன்னை தரக்குறைவாக பேசிய தனசேகரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து தனசேகரை விசாரணைக்கு வருமாறு அழைத்தோம். இந்த நிலையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இருந்தாலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகுதான் தனசேகர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது தெரிய வரும் என்று கூறினர்.


Next Story