கோட் சூட் அணிந்து வந்தது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யம்!


கோட் சூட் அணிந்து வந்தது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய சுவாரஸ்யம்!
x

இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். சுமார், 450-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், 170-க்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள், 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் அணிந்து வந்த காரணத்தையும் விளக்கினார். அவர் பேசுகையில்,

" வெளிநாடுகளுக்கு போகும்போது தான் கோட் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்ட காரணத்தால் இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையில் இருந்து சென்னையில் மழை பெய்கிறது. நான் இங்கு வந்த உடன் முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

தொழில்துறையில் மேன்மையும் தனித்து தொழில்வளம் கொண்ட மாநிலம் தான் தமிழ்நாடு. பண்டைய காலத்தில் இருந்து கடல்கடந்து வாணிபம் செய்தார்கள். இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது " என்றார்.



Next Story